உயர்கிறது தவணை தொகை: வீடு வாங்கியோர் அதிர்ச்சி

ஊரடங்கால் அறிவிக்கப்பட்ட தவணை ஒத்திவைப்பு சலுகை முடிந்ததும் வீட்டுக்கடன் தவணை தொகையை வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் உயர்த்துவதால் வீடு வாங்கியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஒத்திவைப்பு


ஊரடங்கால் தொழில் நிறுவனங்கள் முடங்கின; ஊழியர்கள் முறையான மாத சம்பளம் பெற முடியாததால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. எனவே வங்கிகள் நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட கடன்களுக்கான தவணையை ஒத்தி வைக்கும் சலுகை அறிவிக்கப்பட்டது.

முதலில் மூன்று மாதங்களுக்கு அறிவிக்கப்பட்ட இச்சலுகை ஆக. 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒத்தி வைக்கப்படும் தவணையை ஈடு செய்யும் வகையில் செப்டம்பர் 1 முதல் செலுத்த வேண்டிய தவணை தொகையை நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. இதனால் ஒவ்வொரு வாடிக்கையாளரும் செப்டம்பரில் 500 முதல் 2000 ரூபாய் வரை தவணையில் கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல் அடிப்படையில் தவணை ஒத்திவைப்பு காலத்துக்கு ஏற்ப தவணை காலத்தை நீட்டிப்பதே நல்லது. அதை விடுத்து சில நிதி நிறுவனங்கள் தவணை தொகையை உயர்த்துவது மக்களை பாதிக்கும். ஏற்கனவே சில மாதங்கள் முழு சம்பளம் இன்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும். இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கி உரிய வழிகாட்டுதல்களை நிதி நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


House Stock Pictures, Royalty-free Photos & Images - Getty Images


Comments